மரபிலக்கணப் போக்குகள் தமிழும் தெலுங்கும்

 மரபிலக்கண ஆய்வு வரலாற்றில் இந்த ஆய்வு ஒரு மைல்கல் ஆகும். அதிலும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளின் மரபிலக்கணங்களைத் தனித்தனியே விளக்கி, இறுதியாக ஒப்பிட்டும் விளக்கியிருக்கும்முறை எதிர்கால ஒப்பிலக்கண ஆய்வுகளுக்குக் கருதுகோளைத் தருகின்றது என்றால் அது மிகையில்லை. இதுபோன்ற ஆய்வுகள் தமிழ் ஒப்பிலக்கண ஆய்வு களுக்கு வளம் சேர்ப்பவையாகும். இவ்வாய்வினைத் தமிழ் ஆய்வாளர் களுக்கு வழங்கியிருக்கும் கொடை போற்றத்தக்கதும் பாராட்டத்தக்கதும் ஆகும். இவ்வாய்வினைச் செய்த முனைவர் சி.சாவித்ரி அவர்கள் அயராது ஒப்பிலக்கண ஆய்வுகளில் தொடர்ந்து மெனக்கெட்டு வருபவராவார்.

தெலுங்கு மரபிலக்கணங்களை வாசிக்கும் தமிழ் ஆய்வாளர்களுக்குப் புதிய செய்திகளைத் தருவதற்கு இந்நூல் முனைந்துள்ளது. சான்றாக, பக்.194, 198, 217, 220 ஆகிய பக்கங்களில் அமைந்துள்ள கருத்துக்கள் முறையே வைரி சமாசம், இலக்கண வகைமை, தமிழ்-தெலுங்கு இலக்கண உருவாக்க வேறு பாடு, மொழித்தூய்மை கருத்தியல்கள் குறிப்பாக அறிவிக்கப்பெற்றுள்ளன.

இத்தகு நூலிற்கு பேரா. எல். இராம்மூர்த்தி அவர்கள் மொழியியல் கண்ணோட்டத்தில் இந்நூலை மதிப்பிட்டுள்ள பாங்கு இந்நூலின் வாசகர்களுக்குக் கூடுதல் செய்திகளாகும். இந்த நூலை இலக்கண ஆய்வாளர்கள் வாங்கி வாசித்து தத்தம் ஆய்வுகளை வளப்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

பதிப்பகத்தார் -


கருத்துகள்